ஜம்மு காஷ்மீரில், இயல்பு நிலை திரும்பியதால், 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
பாகிஸ்தானின் தீவிரவாதிகள் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீருக்கு அளித்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிட்டு இருந்தார். அப்போது, எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. தற்போது, இயல்புநிலை திரும்பியுள்ளதால், அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில், நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post