நாகூர் ஊற்று மலைவாழ் மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்ததால், 30-க்கும் மேற்பட்ட குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 பேர் படுகாயமடைந்தனர். 2 வயது குழந்தை, காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், குழந்தையைத் தேடும்பணியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படுகாயமடைந்தவர்கள் கோவை மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்ட வால்பாறை சட்டமன்ற உறுப்பினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்.
Discussion about this post