விமானப் படையை மேம்படுத்தும் நோக்கில் நவீன தொழில்நுட்பத்துடன் உளவு விமானத்தை ரஷ்யா தயாரித்துள்ளது. ஓகோட்னிக் (Okhotnik) என்று பெயரிடப்பட்ட இந்த விமானத்தை பிரபல விமானத் தயாரிப்பு நிறுவனமாக சுகோய் நிறுவனம் தயாரித்துள்ளது. 20 டன் வெடிபொருளைச் சுமந்து கொண்டு, 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறனுடன் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஓகோட்னிக் (Okhotnik) உளவு விமானத்தின் சோதனையை ரஷ்யா வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. விமான புறப்பாடு, நடுவானில் பயணம் மற்றும் தரையிறங்குவது உள்ளிட்ட சோதனை காட்சிகளை அந்நாடு வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் உளவு விமானமான ஆர்க்யூ 170-க்கு போட்டியாக ரஷ்ய உளவு விமானம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post