விமான நிலையத்தை மேகங்கள் சூழ்ந்த நிலையில், ஒரு விமானம் மேகத்தைக் கிழித்துக் கொண்டு வந்து ரன்வேயில் தரையிறங்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
துபாயில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ380 ரக விமானம் ஒன்று, விமான நிலையத்தை சூழ்ந்திருந்த மேகத்தைக் கிழித்துக் கொண்டு வந்து ரன்வேயில் சரியாகத் தரையிறங்கும் காட்சியை, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் கடந்த வாரம் பகிர்ந்திருந்தது.
அதிரடி வருகை’ என்ற பொருளில் ‘கிராண்ட் எண்ட்ரன்ஸ்’ என்று பெயரிடப்பட்ட இந்த 10 நொடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோ, காண்பவர்களை மெய் சிலிர்க்க வைத்ததால், இதனை மக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இதனால் தற்போது இந்த வீடியோ டுவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஒரு மின்னலைப் போல மேகத்தில் இருந்து விமானம் வெளிப்படும் காட்சி திரைப்படங்களில் கதாநாயகன் தோன்றுவதைப் போல உள்ளதாக சமூக வலைத்தளவாசிகள் புகழ்ந்து வருகின்றனர். ரன்வே கண்ணுக்கே தெரியதா போதும் துல்லியமாக விமானத்தைத் தரையிறக்கிய அந்த விமானியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Now that’s how you make a grand entrance. Video credit: Tom Jones pic.twitter.com/ojAOguED4D
— Emirates Airline (@emirates) July 31, 2019
Discussion about this post