இஸ்ரேலின் செயற்கைகோளான அமோஸ் – 17 கடந்த சில தினங்களுக்கு முன், ஃபால்கன் 9 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயற்கைகோளை ஏவும் பணி தடைபட்டது. இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள், ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள விண்வெளி ஏவுதளமான கேப் கனரவெல்லில் இருந்து ஏவப்பட்டது.
Discussion about this post