முதியவர்களுக்கு மட்டும், வீட்டிற்கே சென்று காய்கறிகளை கொடுக்கும் ஒரு புதிய முயற்சியில் கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை விவசாயிகள் இறங்கி உள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு கோவை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த காய்கறி மற்றும் பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தினமும் அதிகாலையிலிருந்தே செயல்படும் இந்த சந்தையில் ஏராளமான மக்கள் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். வயது மூப்பின் காரணமாக, சந்தைக்கு வர இயலாத முதியவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் கொடுத்தால், விவசாயிகள் வீட்டிற்கே சென்று காய்கறிகளை கொடுக்கும் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அன்றைய நிலவரப்படி காய்கறிகளின் விலை பட்டியலும் முதியவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படுகிறது. விவசாயிகளின் இந்த புதிய முயற்சிக்கு முதியவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Discussion about this post