கடந்த 2 நாட்களாக இந்திய பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில் இன்று மீண்டும் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 37 ஆயிரத்து 178 புள்ளிகளுடன் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 11 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது.
அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், நாள் முடிவில் 7 ஆயிரத்து 762 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. அதேபோல், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 218 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5 ஆயிரத்து 277 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 11 ஆயிரத்து 712 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI 20 ஆயிரத்து 585 புள்ளிகளுடன் முடிவடைந்தது. ஹாங்காங் மற்றும் சீன பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது. ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 25 ஆயிரத்து 976 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான SSE 2 ஆயிரத்து 777 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
Discussion about this post