அத்திவரதர் உற்சவத்தின் 37-வது நாளான இன்று வெள்ளை மற்றும் வெளிர் பச்சை நிற பட்டாடை உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்கள் பொதுமக்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதரை காண காஞ்சிபுரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டுள்ளனர்.
உற்சவத்தின் 37-வது நாளான இன்று அத்திவரதர்க்கு வெள்ளை நிறத்தில் வெளிர் பச்சை கலந்த பட்டாடை உடுத்தப்பட்டு உள்ளது. மல்லி, முல்லை, ரோஜா உள்ளிட்ட பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை முதல் காத்திருக்கும் பக்தர்கள், நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை வழிபட்டுச் சென்றனர். பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசு போதிய ஏற்பாடுகள் செய்துள்ளது.
Discussion about this post