தமிழகத்தில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் பரவலான மழை பெய்து வருகிறது.
இதையடுத்து மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, பெரியநாயக்கன் பாளையம், தடாகம் உள்ளிட்ட பகுதிகளிலும், மாநகர பகுதிகளான கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு முதலே மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோன்று, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றிலும் தண்ணீர் வர துவங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post