கோவை மாவட்டம், வால்பாறை செல்லும் சாலையில் வரையாடுகள் கூட்டமாக சாலைகளை கடந்து மேய்ச்சலுக்கு செல்கின்றன. இந்தப்பகுதி பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியாகும். சாலை வழியாக பயணிக்கும் சுற்றுலா பயணிகள் விலங்குகளை தொந்தரவு செய்ய கூடாது, வழியில் வாகனங்களை நிறுத்த கூடாது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் அத்துமீறி வாகனங்களை சாலை நிறுத்தி வரையாடுகளுடன் வீடியோ மற்றும் செல்பி எடுத்து வருகின்றனர். வனப் பகுதியில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post