நாம் மனதில்நினைக்கும் விஷயத்தை வேறு யாராவது தெரிவித்தால் அவர்களை வியப்பாக பார்ப்போம், நாம் நினைக்கும் விஷயத்தை கணிணியே சொன்னால் எப்படி இருக்கும்? ஆம் அதை தொழில்நுட்பத்தின் உதவியோட செயல்படுத்த திட்டமிட்டு இருக்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.
பிரெய்ன் கம்ப்யூட்டர் இண்டர்ஃபேஸ் மூலம் மனித மூளை நினைக்கும் விஷயத்தை கண்டறியும் தொழில்நுட்பம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் மேலும் சில மாற்றங்களை செய்வதன் முலம், ஃபேஸ்புக்கில் நுழையும் ஒவ்வொருவரிடமும் உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்கிற கேள்வியை கேட்ட ஃபேஸ்புக், இனி கேட்காமலேயே டைப் செய்ய ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆராய்ச்சியை சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது ஃபேஸ்புக் நிறுவனம். உலக புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ், தன்னுடைய நரம்புக் குறைப்பாட்டையும் தாண்டி, தான் நினைப்பதை தன் கண்ணத்தின் அசைவு மற்றும் புருவ அசைவை கொண்டு திரை முன் எழுத்துக்களாக கொண்டு வந்தார்.
அது போல, எபிலிப்சிபி பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகளின் மூளையில் எலெக்ட்ராடுகள் பொருத்தி, அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் பதில்களும், அவர்களின் மூளையின் செயல்பாடுகளும் பதிவு செய்யப்பட்டது. இதன்மூலம் அவர்கள் பேசுவதற்கு முன்னதாகவே, அவர்கள் என்ன பேச நினைக்கிறார்கள் என்பதை மூளை செயல்பாடுகள் கொண்டே 76 சதவிகிதம் சரியாக கணிக்கப்பட்டது. இதன் வழியாகவே, பயனாளர்கள் நினைப்பதை அப்படியே எழுத்துகளாக கொண்டுவர முடியும் என்கிறது ஃபேஸ்புக்.
இந்த நிலையில் மூளையினை ஹேக்கிங் செய்யும் கருவியினை மனிதர்களிடம் சோதனை செய்ய தொடங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென எலன் மஸ்கின் நியூராலிங் நிறுவனம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் விண்ணப்பித்துள்ளது, இந்த ஆய்வு மனித மூளையினை படிப்பதால் தனி மனித உரிமைகளை பாதிக்கும் எனவும் சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆராய்ச்சி 100 சதவீதம் வெற்றி அடைய இன்னும் ஆய்வுகளும் காலமும் அதிகம் தேவைப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
Discussion about this post