சென்னையில் வடமாநில பெண் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் பிங்கி என்ற பெண், கணவரை பிரிந்து அண்ணா நகரில், கிருஷ்ண பகதூர் என்ற இளைஞருடன் வசித்து வந்தார். டாட்டு போடுதல் மற்றும் சேலை விற்பனை செய்து வந்த நிலையில், நேற்றிரவு வெளியில் சென்று திரும்பிய கிருஷ்ணன் பகதூர், வீட்டின் குளியலறையில் பிங்கி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, திருமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post