செங்கோட்டை அருகே உள்ள புளியரை எஸ் வளைவுச் சாலையில் உள்ள பள்ளம் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த புளியரை பகுதியில் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக அதிக அளவிலான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வழியில் அடிக்கடி சாலைகளும், வாகனங்களும் பழுதாகி வருகின்றன. குறிப்பாக புளியரை அருகில் உள்ள எஸ் வளைவு சாலைகள் சேதமடைந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். இதுகுறித்து நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் வெளியான செய்தியை அடுத்து, சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள், கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post