அமெரிக்காவில் நாய்கள் பங்கு பெற்ற அலை சறுக்கும் சாம்பியன்ஷிப் போட்டி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லிண்டா மர் கடற்கரையில், நாய்களுக்கான சர்வதேச அலைசறுக்கும் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து 4-வது ஆண்டாக நடந்த இந்த போட்டியில் தங்கள் வீட்டில் வளர்க்கும் நாய்களுடன் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.
ஒவ்வொரு நாயும் மனிதர்களை போல அலைகளில் சறுக்கி போட்டிகளில் பங்கேற்றது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆரவாரமாக நடந்த போட்டியை ஏராளமானோர் நேரில் கண்டு களித்தனர். நாய்களை விளையாட்டில் ஊக்கப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post