ராஜஸ்தானில் அதிகரித்து வரும் ஹூக்கா போதை பார்களுக்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.
ராஜஸ்தானில் பெரும்பாலான இடங்களில் ஹூக்கா போதை பார்கள் இயங்கி வருகின்றன. இதற்கு அடிமையானவர்களின் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் சட்டசபையில் ஹூக்கா போதை பொருளை முற்றிலுமாக தடை செய்யும் மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின் படி தடையை மீறி ஹூக்கா பயன்படுத்துவபவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சம் அபராதமும் விதிக்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post