ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் பெண்கள், புதுமணத் தம்பதிகள், சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
தமிழர்களின் தனித்துவமான பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பெருக்கு விழா. இன்று விமரிசையாக கொண்டாப்பட்டு வரும் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
இன்றைய நாளில் தொடங்கும் எந்தவொரு காரியமும் கைகூடும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. அந்தவகையில், நீர் நிலைகளில் நீராடி பலவகை உணவுகளை படைத்து மஞ்சல் சரடு, காதோலை, கருகமணி, பூமாலை , வளையல், தேங்காய், பழம், அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை வைத்து பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். புதுமணத் தம்பதிகள் புதிய மஞ்சள் கயிறை மாற்றிக்கொண்டால் கணவரின் ஆயுள் அதிகமாகும் என்பதாலும், கன்னிப்பெண்கள் வழிபட்டால் நல்ல வரன் அமையும் என்பதால் நீர் நிலைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
Discussion about this post