பெண்களுக்கு சம உரிமை இல்லாத நாடு என்று பரவலாக விமர்சிக்கப்படும் சவுதி அரேபியாவில் சமீபகாலமாக பெண் உரிமை சார்ந்த புதிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஆண்களின் துணை இல்லாமல் பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்லலாம் என்ற சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது. அங்கு, இதுவரை கணவன் தந்தை மகன் ஆகிய ஆண்களின் அனுமதி இல்லாமல் பெண்கள் பாஸ்போர்ட் பெறவும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவும் முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது இயற்றப்பட்டுள்ள பெண்கள் பயண உரிமை சட்டத்தை சவுதி அரேபிய பெண்கள் கொண்டாடி வருகிறார்கள்.
Discussion about this post