ரஷ்ய காட்டுப்பகுதியில் உள்ள யாகுடியா குடியிருப்பு பகுதிகளில் ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று வாரங்களாக சூரியன் தெரியவில்லை என அப்பகுதி வேதனை தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் ரஷ்ய காட்டுப்பகுதியான சைபீரியாவில் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு ரஷ்ய ராணுவம் சார்பில் அவசர கால விமானம் பீ-200 விமானம் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் தீ அணைக்கப்பட்டது. இந்த நிலையில், இங்குள்ள யாகுடியா பெலெடுய் கிராமத்தில் காட்டுத்தீயில் இருந்து புகை அதிகரித்து காற்று வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் மூன்று வாரங்களுக்கு மேல் சூரியனை பார்க்க முடியவில்லை எனவும் புகை காரணமாக மூச்சு விடுதல் சிரமமாக இருந்ததாகவும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அவசர கால ஆம்புலன்ஸ் தேவைப்படுவதகாவும் உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர். காட்டு தீ ஏற்பட்டதை தொடர்ந்து விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளதாக தெரிவித்தனர்.
Discussion about this post