நாடு முழுவதும் வரும் 2 மாதங்களுக்கு இயல்பான அளவு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் மகாராஷ்டிரா, பீகார், அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் வரும் 2 மாதங்களுக்கு இயல்பான அளவிற்கு மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய 2 மாதங்களில் 100 சதவீதம் சராசரி அளவு தென்மேற்கு பருவ மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 சதவீதம் கூடவோ, குறையவோ செய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வடக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 2 வாரங்களுக்கு நல்ல மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post