கோவையில் மலிவு விலை நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்தவரான முருகானந்தத்தின் தொழிற்சாலையை, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் ஹென்சி ஹிரமட்சு பார்வையிட்டார். ஜப்பான் தூதருடன் அவருடைய மனைவி பட்ரிசியாவும் தொழிற்சாலைக்கு வருகை தந்தார். முருகானந்தத்தின் கண்டுபிடிப்புகள் ஜப்பானில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதாகவும், ஜப்பானில் முருகானந்தத்திற்கு ஏராளமான இளம் ரசிகர்கள் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் உலகம் முழுவதிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்தக் கண்டுபிடிப்பினால் தாங்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
மேலும் முருகானந்தம் ஜப்பானுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். மலிவு விலை நாப்கின் இயந்திரங்களுக்காக உலகம் முழுவதும் பாராட்டை பெற்ற முருகானந்தம் 2014 ல் டைம்ஸ் இதழின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். மத்திய அரசு 2016 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது.
Discussion about this post