சீனாவில் உள்ள ஷூயூன் வாட்டர் என்ற தீம் பார்க்கில் உள்ள நீச்சல் குளத்தில், செயற்கை அலையை உருவாக்கும் இயந்திரம் உள்ளது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் நீராடிக் கொண்டு இருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மிகப் பெரிய சுனாமி போல் பேரலையை ஒன்று எழுந்து, அங்கிருந்தவர்களை தூக்கி வீசியது. இதில் 44 பேர் காயமடைந்தனர். பார்ப்பதற்கு நிஜ சுனாமி அலை போல் இருந்ததாக அங்கிருந்து மக்கள் கூறினர்.
அலை உருவாக்கும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஷூயூன் வாட்டர் பார்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வாட்டர் பார்க் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாட்டர் பார்க்கில் ஏற்பட்ட சுனாமி போன்ற பேரலை எழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
The terrifying moment a 10-foot 'tsunami' caused by a faulty #wave #machine crashes into pool-goers in #China leaving 44 injured, took place at the hugely popular summer tourist resort Shuiyun Water Park pic.twitter.com/0KFZApxPpQ
— Hans Solo (@thandojo) August 1, 2019
Discussion about this post