போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த 146 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்த 146 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சிக்காக அப்பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்தவும், நீர்நிலைகளை கடந்து செல்லவும் போதிய பாலங்கள் கட்டப்பட உள்ளன.
இதற்காக நடப்பாண்டில் 700 குறு பாலங்கள், 250 சிறு பாலங்கள் மற்றும் 100 தரைப் பாலங்கள் கட்டப்பட உள்ளன. மொத்தம் ஆயிரத்து 50 பாலங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post