கனமழை எச்சரிக்கையால் அமர்நாத் யாத்திரை வரும் 4ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் குகையில் தானாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். கடந்த ஜூன் 30ஆம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை வரும் 15ஆம் தேதி வரை ஷ்ரவன் பூர்ணிமாவுடன் நிறைவடையும். ஜம்மு- காஷ்மீரில் அடுத்த சில நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இன்று முதல் நான்கு நாட்களுக்கு அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பால்தால் மற்றும் பஹல்காமில் பெய்த மழையால், யாத்திரீகர்கள் செல்லும் இரு பயண வழிகளில் வழுக்கும் தன்மை அதிகரித்துள்ளது. வானிலை மையத்தின் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, பயணம் வரும் 4ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post