சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டியின் ஒலிம்பிக் தீபம் இன்று ஏற்றப்பட்டது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நடைப்பெறுகிறது.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்துவ கல்லூரி வளாகத்தில் சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டிகான ஜோதியை நடிகர் அருண்விஜய் ஏற்றி வைத்தார். இந்த போட்டியின் தொடக்கவிழா வரும்3ம் தேதி நடைபெறுகிறது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா, ஐக்கிய நாடுகளின் தற்போதைய தூதரக பிரதிநிதி கென்ட் மே, விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் இயக்குநர் கிறிஸ்டியன் கிரால்ட் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். மேலும், போட்டியின் நிறைவு விழாவில் மத்திய இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் நிறைவு விழாவில் கலந்துகொள்கின்றனர். இதில், பாகிஸ்தான், இந்தோனீசியா, மாலத்தீவு, சீனா, மலேசியா, வங்கதேசம், ரஷ்யா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்கின்றனனர். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வீரர்கள் வந்து சிறப்பு கால்பந்து போட்டியில் கலந்துகொள்வது இதுவே முதன்முறையாகும். மேலும், 12 ஆடவர் அணிகளும், 8 பெண்கள் அணிகளும் பங்கேற்கின்றனர். மூன்று பிரிவுகளாக நடைபெறும் இந்த சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டியில், 15-25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அருண் விஜய், இந்தியாவில் சுமார் அறிவுத்திறன் குறைவுடையவர்கள் 15லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேர் உள்ளதாக குறிப்பிட்டார். இவர்களிடம் பல்வேறு திறமைகள் இருக்கின்றன அதனால், இவர்களை ஊக்குவிப்பதற்காக இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது என கூறினார்.
Discussion about this post