விருதுநகர் மாவட்டத்தில் 65 கண்மாய்கள் தூர்வாரப்பட வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் படி முதலமைச்சரின் உத்தரவின் படி, குடிமாரமத்து திட்டம் மூலம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்களை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. 26 கோடி செலவில் செய்யப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிவஞானம் நேரில் ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் மூலம், இனிவரும் காலங்களில் மழை நீரை அதிக அளவில் சேமித்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம் என்றார்.
Discussion about this post