மேற்கு ஆப்பிரிக்கா நாடான காம்பியாவிற்கு ஒத்துழைப்பு அளிப்பதற்காக இந்தியா சார்பில் 3 கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளது.
காம்பியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், அந்நாட்டு அதிபர் அடாமா பாரோவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் விதமாக இருவரும் ஆலோசனைகளை நடத்தினர். இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையேயான ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் பாரம்பரிய மருத்துவ துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் ஜவுளி தொழில், திறன் மேம்பாடு ஆகிய துறைகளை ஊக்குவிப்பதற்காக, காம்பியாவிற்கு 3 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க இந்தியாவின் சார்பில் அறிவிக்கப்பட்டடுள்ளது.
Discussion about this post