புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி நேரில் ஆய்வு செய்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில், அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடந்து வருவதாக ஆட்சியர் தெரிவித்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் ஆட்சியர் உமா மகேஸ்வரி கூறினார்.
Discussion about this post