தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் முதற்கட்ட கலந்தாய்வானது கடந்த ஜூலை 8 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 3 ஆயிரத்து 968 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்ட நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப ஒப்படைக்கப்பட்ட 261 எம்.பி.பி.எஸ் மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் இன்று தொடங்கியது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து 2ஆம் கட்ட கலந்தாய்விற்கு கடந்த ஆண்டு 101 இடங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கு கூடுதலாக 160 இடங்கள் தமிழகத்திற்கு திரும்ப கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post