நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் அரசு வழங்கிய விசைப்படகுகள் மீனவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இலங்கை கடற்படையிடம் படகுகளை இழந்த தமிழக மீனவர்களுக்கு நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் அதிநவீன விசைப்படகுகளை வழங்கியுள்ளன. 70 சதவீத மானியதுடன் வழங்கப்பட்ட இந்த படகுகள், நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த படகுகளுக்கு மீனவர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. நீலப்புரட்சி விசைப்படகுகள் மூலம் பிடித்து வரும் மீன்களை இந்தியாவின் எந்த துறைமுகத்திலும் விற்பனை செய்ய மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post