இங்கிலாந்து சிறைபிடித்துள்ள ஈரான் கப்பலில் இருந்து, தனது மகனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு திருச்செங்கோடு கப்பல் பொறியாளர் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடையை மீறி சிரியா நாட்டிற்கு ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணை ஏற்றிச் சென்ற எண்ணைக் கப்பலை, இங்கிலாந்து நாட்டின் ராயல் ராணுவம், ஜிப்ரால்டர் கடற்பகுதியில் ஜூலை 4-ம் தேதி சிறைபிடித்தது. இங்கிலாந்து ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஈரானைச் சேர்ந்த எண்ணைக் கப்பலான கிரேஸ் 1-ல் இந்தியாவைச் 21 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த கப்பல் பொறியாளர் நவீன் மற்றும் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பாலாஜி ஆகியோர் சிறை வைக்கப்பட்டுள்ளனர். நவீனை மீட்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post