பாஜக எம்.பி.க்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி அளிக்கப்படும் என கட்சி தலைமை அறிவித்துள்ளது
அதன்படி, ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்த பயிற்சிக்கு அபியாஸ் வர்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். இந்த பயிற்சியில் பாஜக எம்பிக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகு, மக்கள் மத்தியில் சென்று ஆற்ற வேண்டிய பணிகள், தொகுதி வளர்ச்சி பணிகள், அரசின் சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்லுதல் போன்ற அம்சங்கள் இப்பயிற்சியில் இடம்பெறக்கூடும் என கூறப்படுகிறது.
Discussion about this post