பிரக்ஸிட் ஒப்பந்தம் தற்போது சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இது தொடர்பாக இங்கிலாந்து பிரதமரிடம் பேச்சு வார்த்தை நடத்த ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வருவதாக அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் பிரதமராக இருந்த தெரசாமே பிரக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரீஸ் ஜான்சன் பதவியேற்றார். இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததை அடுத்து அதன் முன்னாள் தலைவர் ஜீன் கிளவுடி ஜன்கர், இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சனுடன் பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய ஐரோபிய யூனியனின் செய்தி தொடர்பாளர் நடாஷா பெர்டவுட், பிரக்ஸிட் ஒப்பந்தம் தற்போது சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இது குறித்து இங்கிலாந்து பிரதமரிடம் பேச்சு வார்த்தை நடத்த ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளார். இங்கிலாந்தின் புதிய பிரதமர் போரீஸ் ஜான்சன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதாக உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post