திருவள்ளூர் அருகே செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற இருவரை பொது மக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், செயினை பறிக்க முயன்றனர். அந்த முயற்சியில் நிலைதடுமாறி விழுந்த இருவரையும், பொதுமக்கள் பிடிக்க முயன்றனர். அப்போது கத்தியை காட்டி மிரட்டி தப்ப முயன்றவர்களை, விடாமல் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்துள்ளனர்.
அதன்பின், இருவரையும் வெங்கல் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் வில்லிவாக்கத்தை சேர்ந்த செயின் பறிப்பு திருடர்கள் பூபாலன் மற்றும் ராஜ்குமார் என்பது தெரிய வந்துள்ளது.
Discussion about this post