இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சரான ஓப்போ நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வருவதால், அணியின் அடுத்து ஜெர்ஸி ஸ்பான்சராக இந்தியாவின் தொழில்நுட்ப ஆன்லைன் டியூட்டோரியல் நிறுவனமான பைஜூ (Byju’s)இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓப்போவின் வரும் மேற்கு இந்திய தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதன் படி, மேற்கு இந்திய தொடரில் மட்டும், இந்திய அணியின் ஜெர்ஸியில் ஓப்போ இடம்பெறும்.
கடந்த 2017ஆம் ஆண்டு பிசிசிஐ ஓப்போ நிறுவனத்துடன் 5 ஆண்டுகால ஒப்பந்தம் போட்டது. அதன் படி, ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.1079 கோடி ஆகும். மும்முனை ஒப்பந்தம் அடிப்படையில் ஓப்போ- பைஜூ – பிசிசிஐ ஆகியோரிடையே இன்று கையெழுத்தாகிறது.
Discussion about this post