இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்துடிப்பாக விளங்கும் தோனி, ராணுவத்தினருடன் இணைந்து வரும் 31ம் தேதி முதல், ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக சிறப்பு பதவியில் உள்ளார். தன் ஒய்வுக்கு பிறகு ராணுவ வீரர்களுடன் நேரத்தை செலவிட உள்ளதாக பலமுறை தோனி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின் சிறிய ஒய்வு தேவைப்படுவதால் ராணுவ குழுவுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்ததார்.
இதனால் இந்திய கிரிக்கெட் அணியின், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற ராணுவ தளபதி பிபின் ராவத், தோனிக்கு அனுமதி வழங்கினார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் ராணுவ நடவடிக்கையில் பங்குபெற அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாராசூட் ரெஜிமெண்டுடன் இணைந்து, தோனி தனது ராணுவப் பயிற்சியை மேற்கொண்டதாகவும், அடுத்த 2 மாத காலம் ராணுவ வீரர்களுடன் இந்த பயிற்சியை மேற்கொள்வார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், வரும் 31ம் தேதி முதல், ராணுவத்தினருடன் இணைந்து வரும் 31ம் தேதி முதல், ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளதாகவும், ஆகஸ்ட் 15ம் தேதி முதல், காஷ்மீர் பகுதியில், ராணுவ குழுவுடன் இணைந்து, ரோந்து பணியில் ஈடுபடுவதுடன், ராணுவப் படையுடன் தங்கியிருந்து, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளிலும் தோனி ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post