சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் ஒன்று கூட குறையாமல் இருக்கும் போது, 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன் ? என கேள்வி எழுப்பினார்.
நீட் விவகாரத்தில் அரசியல் செய்யாமல் மாணவர்களை நிம்மதியாக படிக்க விடுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இட ஒதுக்கீட்டில் எந்த விதத்திலும் குறைபாடும் கிடையாது என விளக்கிய அவர், பொதுமக்களிடம் வேண்டுமென்றே பிரிவினையை ஏற்படுத்த மு.க.ஸ்டாலின் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.
Discussion about this post