இங்கிலாந்தின் உள்துறை செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த 47 வயதான பெண் ப்ரீதி படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ப்ரீதி படேலை இங்கிலாந்தின் உள்துறை செயலாளராக நியமித்துள்ளார்.சில தினங்களுக்கு முன்பு இங்கிலாந்தின் பிரதமராக போரிஸ் ஜான்சன் பொறுப்பேற்றார்.இந்நிலையில் கேபினெட் அமைச்சர்களின் பட்டியல் வெளியாகிவுள்ளது.இப்பட்டியலில் 3 பேர் இந்தியர்கள் உள்ளனர்.
47 வயதான ப்ரீதி படேல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.இவருக்கு உள்துறை அமைச்சர் பதவியை போரிஸ் ஜான்சன் வழங்கியுள்ளார்.இனி இவர் தான் அந்நாட்டின் பாதுகாப்பு, தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர் கொள்வது என அனைத்து முக்கிய விவகாரங்களிலும் இவரே முடிவெடுக்க வேண்டும். மேலும், போரிஸ் ஜான்சனின் தலைமைப் பிரசாரத்தில் முக்கிய பங்கு வகித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்று பிரிட்டிஷ்காரர்கள் நம் இந்தியாவில் புகுந்து நம்மை அடிமை படுத்தி நம் உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை அவர்களே முடிவெடுத்தனர்.ஆனால் இன்று இந்தியா வம்சாவளியை சேர்ந்த பெண் அங்கு சென்று அந்நாட்டின் முக்கிய விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரத்தை பெற்றிருப்பது, இந்தியர்கள் அனைவரையும் பெருமை படுத்தும் தருணமாகும்.
Discussion about this post