பீகார், அசாம் மாநிலங்களில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.
வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன்படி, அசாம், பீகார், மகாராஷ்டிர மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. அசாம் மாநிலத்தில் கொட்டித் தீர்க்கும் மழையால், நூற்றுக்கணக்கான மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மழை தொடர்வதால், மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் மழையின் தீவிரம் குறையவில்லை. தாழ்வான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து இருப்பதால், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு மாநிலங்களிலும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டு தினங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Discussion about this post