மாநில மொழிகளில் அஞ்சல் துறை தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் துறைக்கான தேர்வுகளை மத்திய அரசு ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் நடத்தி வந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஞ்சல் துறை சார்பில் நடத்தப்பட்ட தேர்வில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது. இதனையடுத்து மாநில மொழிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறி மாநிலங்களவையில், அ.தி.மு.க.,உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, நடத்தி முடிக்கபட்ட அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் தொடர்ந்து மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் எனவும், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் உறுதி அளித்தார். இந்நிலையில் மாநில மொழிகளில் தேர்வு நடத்துவது குறித்து அனைத்து அஞ்சலக தலைமை அதிகாரிகளுக்கும் மத்திய அரசு சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
Discussion about this post