தேங்காய் விலை உயர்வால் அந்தியூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் தென்னை மர தோப்புகளை வைத்துள்ளனர். நீர் பற்றாக்குறையால் தேங்காய் வரத்து குறைந்த அளவே, இருந்த சமயத்திலும் விலையானது ஐந்து ரூபாயில் இருந்து ஆறு ரூபாய் வரை விற்பனையாகி வந்தது.
கொப்பரை தேங்காய்க்கான அடிப்படை ஆதார விலையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்ததன் விளைவாக, தேங்காய் 9 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post