தண்ணீர் தட்டுப்பாடை உணர்ந்து அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று, வருமான வரித்துறை ஆணையர் ரெங்கராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் 159வது வருமான வரி தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக வருமான வரித்துறை அலுலவகத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் நவீன முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் அனு ஜெ. சிங் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வருமான வரித்துறை ஆணையர் ரெங்கராஜ், சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், அதுகுறித்து அதிகமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முதல் முறையாக நவீன முறையில் மழை நீர் சேகரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறினார். இதன் மூலம் ஆண்டுக்கு 20லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post