நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், ஆட்சியமைக்க ஆளுநரிடம் பாஜக இன்று உரிமை கோரவுள்ளது.
கர்நாடக சடப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு 6 வாக்குகள் வித்தியாசத்தில் தேல்வியடைந்தது. இதையடுத்து புதனன்று, ஆளுநர் வஜூபாய் வாலவிடம், கர்நாடகாவில் ஆட்சியமைக்க பாஜக உரிமை கோரவுள்ளது. இது தொடர்பாக நேற்று நள்ளிரவு, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பெங்களூருவில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எடியூரப்பா, இது ஜனநாயகத்தின் வெற்றி என்றும், வளர்ச்சிக்கான புதிய சகாப்தம் இனி தொடங்கும் எனவும் கர்நாடக மக்களுக்கு உறுதியளிப்பதாக தெரிவித்தார்.
Discussion about this post