மழலையர் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் பல்கலைகழக பட்ட மேற்படிப்பு விழாவில் அம்மாநில துணை முதலமைச்சர் தினேஷ் சர்மா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜிஎஸ்டி படிப்பு முறை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இதன்மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.
அடுத்த கல்வியாண்டு முதல் முக்கிய நகரங்களில் ஆரம்ப கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசமாக கல்வி வழங்க உத்தர பிரதேச அரசு திட்டமிட்டுள்ளதாக தினேஷ் சர்மா தெரிவித்தார். இதேபோன்று, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்வுகளை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post