தமிழக தலைமைத் தகவல் ஆணையராக பதவி வகித்து வந்த ஷிலா நாயர் ஓய்வு பெற்றதையடுத்து புதிய ஆணையரைத் தேர்ந்தெடுக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் வாழ்க்கை முறையை நன்கு அறிந்ததவர்கள், சட்டத்தில் முன் அனுபவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், நிர்வாகம், மேற்பார்வை இதழியலில், ஆளுமை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளிலும் ஆதாயம் தரும் பதவிகளிலும் இருக்க கூடாது என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் ஆணையராகத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் 5 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Discussion about this post