சென்னை மற்றும், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக, ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் வடகடலோர மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, சென்னையின் வடபழனி, விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்ள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் தென் மேற்கு பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், சென்னையில் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post