சூலூர் பகுதியில் தொடர்ந்து மர்மமான முறையில் மயில்கள் இறந்து வருவது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதிகளில் விவசாயிகள், கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்த தானியங்களை உண்பதற்காக மயில், புறா, கிளி போன்ற பறவை இனங்கள் வருகின்றன. இதனை விரட்டுவதற்காக விவசாயிகள், பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். சில சமயங்களில் மருந்து வைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மயில்கள் இறந்து கிடந்தது. வனத்துறையினர் விசாரனை மேற்கொண்டு விவசாயிகளை எச்சரித்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் மயில் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து, அதனை கைப்பற்றிய வனத்துறையினர், மயிலின் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Discussion about this post