பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக கஜகஸ்தானில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3 ஆய்வாளர்கள் புறப்பட்டு சென்றனர்.
பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர். இந்நிலையில், கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சோயூஸ் எம்.எஸ் – 13 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு, ஆண்ட்ரூ மோர்கன், லூகா பார்மிடானோ மற்றும் அலெக்சாண்டர் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் வரும் அக்டோபர் 3ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
Discussion about this post