சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் இயங்கும் 36 ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.50 மணி முதல் மதியம் 1.50 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மதியம் 2 மணி முதல் சென்னை கடற்கலை – வேளச்சேரி வழித்தடத்தில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.10 வரைலும் அதேபோல், சென்னை கடற்கரை முதல் காஞ்சிபுரம் இடையே காலை 11 மணி முதல் மதியம் 1.50 மணி வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ரயில் சேவை தொடங்கும் நேரத்தில் கூடுதலாக 8 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Discussion about this post