நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் மாமல்லபுரம் கடற்கரையை மேம்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது, கடற்கரையில் உள்ள இயற்கை வளங்கள், இடங்களை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்தும் நோக்கில் நீலக்கொடி கடற்கரை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாமல்லபுரம் உட்பட 12 கடற்கரைகள் நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது.
இதில் சுற்றுலாப் பயணிகள் கடலில் நீராட 500 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில் பிரத்யேக வளாகம், நீர் சாகச விளையாட்டு வசதி, படகு சவாரி வசதி, மாற்றுத்திறனாளி வசதி மற்றும் குடிநீர், கழிப்பறை வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன. மேலும் தேர்வு செய்யப்பட்ட 12 கடற்கரைகளுக்கும் டென்மார்க் அரசாங்கத்தால் நீலக்கடற்கரையாக தேர்வு செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
Discussion about this post