முன்னாள் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங், பாஜக தேர்தல் மேற்பார்வை குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக பாஜகவின் அமைப்பு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில் விரைவில் அமைப்பு தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவின் பதவிக்காலம் முடிவடைந்து, நாடாளுமன்ற தேர்தலுக்காக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஒரு பதவி என்ற பாஜகவின் கொள்கையின் படி, தற்போது உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பில் உள்ளதால், விரைவில் கட்சிக்கான தலைவரை தேர்தெடுக்கும் கட்டாயத்தில் பாஜக உள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த அக்கட்சியின் மூத்த தலைவர் ராதா மோகன் சிங், பாஜகவின் அமைப்பு தேர்தலை கண்காணிக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பாஜக அமைப்பின் தேசிய மற்றும் மாநிலத் தலைவர் உள்பட அனைத்து விதமான பதவிகளுக்கான தேர்தல் நடவடிக்கையை கண்காணிக்கும் மேற்பார்வை குழு தலைவராக செயல்படுவார்.
Discussion about this post